×

கேரளாவில் லாட்டரி வியாபாரிக்கு ரூ5 கோடி பம்பர் பரிசு: மகன் ஊர் திரும்பும் வரை கப்சிப்

திருவனந்தபுரம்: கேரள அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் ரூ5 கோடி முதல் பரிசாக அறிவிக்கப்பட்டது. இதற்கான குலுக்கல் கடந்த 21ம் ேததி நடந்தது. முதல் பரிசு ஆர்.ஏ.591801 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி எர்ணாகுளம் மாவட்டம், கூட்டாட்டுகுளம் பகுதியை சேர்ந்த யாக்கோப் குரியன், கடையில் விற்பனையானது தெரியவந்தது. ஆனால், டிக்கெட்டை வாங்கியது யார்? என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தான் அந்த ரூ5 கோடி பரிசு பெற்றது யாக்கோப் குரியன் என்பது தெரிந்தது.இது குறித்து யாக்கோப் குரியன் கூறியதாவது: அந்த டிக்கெட்டை என்னுடைய மகனிடம் கொடுத்து வைத்திருந்தேன். அவன் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை சென்றிருந்தான். எனவே, ஊர் திரும்பும் வரை விவரத்தை வெளியே கூறாமல் இருந்தேன். நேற்று மகன் ஊருக்கு வந்தவுடன், ரூ.5 கோடியை முதலீடு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post கேரளாவில் லாட்டரி வியாபாரிக்கு ரூ5 கோடி பம்பர் பரிசு: மகன் ஊர் திரும்பும் வரை கப்சிப் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Ur Thiruvananthapuram ,Lottery ,Kapsip ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை